முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

முதல் ரேங்க் பெற்ற 15 மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்

சென்னை, ஜூலை.6 - எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான முதல் கட்ட கவுன்சிலிங் நேற்று    தொடங்கியது.    முதல் ரேங்க் பெற்ற 15 மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர். தமிழ்நாட்டில் 18 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 இடங்கள் ஏற்கனவே உள்ளன.

செங்கல்பட்டு அரசு மருத் துவக்கல்லூரியில் ஏற்கனவே எம்பிபிஎஸ் இடங்கள் 50 மட் டுமே உள்ளன. இந்த ஆண்டு மேலும் 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. அதாவது 100 இடங்களாக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு 100 இடங்களுக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. மொத்தத்தில் 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.மொத்தத்தில் 2145 இடங்கள் ஆகும். இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம். மீதம் உள்ள இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.    தமிழ்நாட்டில் உள்ள 18 அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் 1823 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன. சென்னையில் மட்டும் ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி இருக்கிறது. இதில் 85 இடங்கள் உள்ளன. சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 838 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கிறது.       எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர பிளஸ்2 முடித்த மாணவ,மாணவிகள் 28 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு ரேண்டம் நம்பர் மற்றும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரேங்க் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. முதலில் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் காலை 10 மணிக்கு தொடங்கியது. பின்னர் பொது கவுன்சிலிங் காலை 11 மணிக்கு தொடங்கியது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கலந்துகொண்டு கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார்.    கட் ஆப் மார்க்கில் 200க்கு 200 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 16 பேரும் மருத்துவத்துறையை தேர்வு செய்தனர். அதில் 15 மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். மாணவர்  பெர்மியோ மட்டும் கன்னியாகுமரி  மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தார். 16 மாணவர்களுக்கும் சுகாதாரத்துறைத் அமைச்சர் விஜய், கல்லூரியில் சேருவதற்கான அனுமதி சான்றிதழை வழங்கி ,பாராட்டினார். கவுன்சிலிங் வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. . . மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் போன்ற சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நேற்று   முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பொதுப் பிரிவினருக்காள கலந்தாய்வு நடக்கிறது. வருகிற 16​ந்தேதிவரை முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெறுகிறது. சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்கள் மற்றும் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான 2​ம் கட்ட கலந்தாய்வு இம்மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா, துணை இயக்குனர் முத்துராஜ், மாணவர் தேர்வு செயலாளர் சுகுமார், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்