முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தெற்கு தொகுதியில் திமுகவினர் பணம் கொடுக்க முயற்சி

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.2 -  மதுரை தெற்குதொகுதியில் திமுகவினர் காரில் வந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தனர். இதை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறிவருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான வழக்குகள் திமுகவினர்  பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வாகன சோதனை நடத்தி கணக்கில் வராத கோடிக்கணக்கான பணத்தை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் நேற்று இரவு திமுக மாவட்ட துணைச்செயலாளர் எம்.எல்.ராஜ் தலைமையில் திமுகவினர் ஒரு  காரில் லட்சக்கணக்கான பணத்துடன் தாரபட்டி என்ற இடத்திற்கு வந்தனர். அங்கு நின்று கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற போது பொதுமக்கள் பார்த்துவிட்டனர். இது குறித்து தேர்தல் அதிகாரி ஜெயசிங்குக்கு தகவல் கொடுத்தனர்.

    தேர்தல் அதிகாரி வருவதை அறிந்த திமுகவினர் காரை போட்டு விட்டு ஓடி விட்டனர். தேர்தல் அதிகாரி விரைந்து காரை கைப்பற்றி தீவிர சோதனை செய்தார். ஆனால் சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. பணத்துடன் திமுகவினர் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்