முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டென்னிஸ் வீரர்கள் சாதனை படைப்பார்களா?

சனிக்கிழமை, 28 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 28 -  லண்டன் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டிகள் இன்று துவங்க உள்ளன. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சாதனை படைப்பார்களா? ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு முன்னதாக நடந்த போது, யாருக்கு யார் பார்ட்னர் என்பது குறித்து வீரர்களிடையே  மோதல் ஏற்பட்டது. 

எனவே கருத்து வேறுபாடுகளை அவர்கள் மறந்து நாட்டிற்காக ஒருங்கிணைந்து ஆடி பதக்கம் பெற்றுத் தருவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. 

சமீபத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி னர். லியாண்டர் ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன் னேறியது. 

அதே போல விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கிலும் இந்திய வீரர் கள் மற்றும் வீராங்கனைகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டிற்காக ஆடி பத க்கம் பெற்றுத் தரவேண்டும். 

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி மற் றும் சானியா மிர்சா ஆகியோர் தொழில்ரீதியிலான ஆட்டக்காரர்கள். 

அவர்கள் தங்களது அனுபவத்தையும், திறமையையும் வெளிப்படுத்தி முத்திரை பதிப்பார்களா? என்பது ஒரு சில நாட்களில் தெரிய வரும். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியும், ரோகன் பொபண்ணாவும் இணைந்து ஆட உள்ளனர். இந்த ஜோடி முதல் சுற்றில், பெலாரசைச் சேர்ந்த மேக்ஸ் மிர்ன்யி மற்றும் அலெக் சாண்டர் புரியை சந்திக்கிறது. 

லியாண்டர் பயஸ் மற்றும் விஷ்ணுவர்த்தன் ஜோடி முதல் சுற்றில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜூலியன் ஜீன் மற்றும் ராபின் ஹாஸ் இணையைச் சந்திக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு நேற்று முன் தினம் நடந்தது. 

மகளிருக்கான இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் ருஷ்மி சக்ரவ ர்த்தி இணைந்து ஆட உள்ளனர். இந்த ஜோடி முதல் சுற்றில் சீன தைபெய்யைச் சேர்ந்த சுவெய் சேக் மற்றும் ஜியா ஜங் சுவாங் இணையுடன் மோத ஆயத்தமாக உள்ளது. 

ஒயில்டு கார்டு மூலம் ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியுள்ள மற்றொரு வீரரான சோம்தேவ் வர்மன் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், பின்லாந்தைச் சேர்ந்த ஜார்க்கோ நிமினென்னைச் சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்