முக்கிய செய்திகள்

திட்டங்களை உங்களிடம் சேர்க்க வாய்ப்பு தாருங்கள் - செல்லூர் ராஜு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Raju

 

மதுரை, ஏப்.3 - ஜெயலலிதா அறிவித்த நலத்திட்டங்களை உங்கள் வீடு வந்து சேர்க்க எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜு தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

மதுரைமேற்கு தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் செல்லூர்ராஜு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வீதி வீதியாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டு வருகிறார். கூடல்நகர், பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார். நேற்று அச்சம்பத்து, விராட்டிபத்து பகுதியில் வீடு வீடாகச் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். பள்ளி மாணவ-மாணவிகளும் செல்லூர் ராஜுக்கு இரட்டை விரலை காண்பித்து தங்களது வரவேற்பை தெரிவித்தனர். 

பிரச்சாரத்தில் வேட்பாளர் செல்லூர் ராஜு பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் நலமாக வாழமுடியும், தமிழ்நாட்டில் நிலவும் மின் வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக அமரவேண்டும். அவ்வாறு அவர் முதலமைச்சர் ஏறியவுடன்  குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி மாதம் தோறும் இலவசமாக கிடைக்கும். இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் உங்கள் வீட்டிற்கே கொண்டுவந்து சேர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு தாருங்கள்.  அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் தவறாமல்  வாக்களித்து என்னை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு செல்லூர் ராஜு பேசினார்.

பிரச்சாரத்தின்போது வேட்பாளருடன் வி.வி.ராஜன்செல்லப்பா, பெ.சாலைமுத்து, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.முத்துராமலிங்கம்,  மகளிரணிச் செயலாளர் பெ.இந்திராணி, இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம், பகுதிக் கழகச் செயலாளர் பூமிபாலகன், வடக்கு 1-ம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.கே.நகர் மணி, தெய்வம் கணபதி, பாப்பா லோகநாதன், புதூர் ஆர்.ஜோதி,  பாகச் செயலாளர்கள் மரக்கடை கண்ணன், பேரவை இணைச்செயலாளர் வெற்றிவேல், செல்லூர் பாஸ்கரன், யுகாராஜா, வட்ட செயலாளர் சக்திவினாயகர்பாண்டியன்,  விளாங்குடி திரவியம் உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: