முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி இந்தியவீரர் லைஸ்ராம்வெற்றி

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. - 1 - லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம் பிக் போட்டியின் குத்துச் சண்டைப் பிரி வில் இந்திய வீரர் லைஸ்ராம் முதல் சுற் றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  30- வது ஒலிம்பிக் போட்டிகள் இங்கி லாந்து நாட்டின் தலைநகரான லண்ட னில் கடந்த சில நாட்களாக வெகு விம ர்சையாக நடந்து வருகிறது. இதனை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.  ஒலிம்பிக்கில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆட வருக்கான 49 கிலோ எடைப் பிரிவிற் கான குத்துச் சண்டைப் போட்டி நடந் தது. குத்துச் சண்டைப் போட்டிகான முதல் சுற்றில் இந்திய வீரர் லைஸ்ராமும், ஹோண்டுராஸ் வீரரும் மோதினர். இதில் இந்திய வீரர் ஆவேசமாக சண்டையிட்டார். 

இறுதியில் இந்தியாவின் இளம் வீரரான லைஸ்ராம், ஹோண்டுராஸ் வீரர் பெரான் பொலினாவை வீழ்த்தி காலிறு திக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் முன்னணி வீரரான விஜேந்தர் சிங் மற் றும் ஜெய்பகவான் ஆகியோர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்