முக்கிய செய்திகள்

தேர்தல் அதிகாரி மீது தாக்குதல்:மு.க. அழகிரியை பதவி நீக்க வேண்டும் பா.ஜ.க. வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
muralithar rao

 

மதுரை,ஏப்- .4 - தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை பதவி நீக்கம் செய்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலர் முரளிதர் ராவ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது, தேர்தல் ஆணையத்தின் சிறப்பான நடவடிக்கையை திசை திருப்பி அலுவலர்களை அச்சுறுத்தும் வகையில் தி.மு.க. தலைவர்கள் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இப்போது மதுரையில் தேர்தல் அலுவலர் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் மற்ற கட்சியினருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தேர்தல் அலுவலர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள் மூலம் உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தேர்தல் அலுவலரை தாக்கியதாக மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில் தேர்தல் பணியாற்றிய அலுவலர் தாக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது. ஆகவே இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு அழகிரியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுவே தமக்கு கடைசி வாய்ப்பு எனக் கருதி ஜனநாயகத்தின் மீது தி.மு.க போர் தொடுத்துள்ளதாகவே இச்சம்பவத்தை கருத வேண்டியதுள்ளது. ஆனால் தி.மு.க.வின் இத்தகைய நடவடிக்கையானது தமிழ் கலாசாரம். தமிழக முன்னேற்றத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே கருத வேண்டியதுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: