முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி சிக்கம்மன் சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, ஆக.- 20 - ஊட்டி அருள்மிகு சிக்கம்மன் சித்தப் பீடத்தில் ஆடிப்பூர விழா நடந்தது. ஊட்டி, முள்ளிக்கொரையில் அமைந்துள்ள அருள்மிகு சிக்கம்மன் சித்தர் பீடத்தில் 37-வது ஆண்டு ஆடிப்பெருவிழாவும், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் அழைப்பும், சிறப்பு பூஜையும், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக ஆற்றங்கரையிலிருந்து அடிகளார் தலைமையில் கலசமும், கையில் தீச்சட்டியும் எடுத்துவர, அவரைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீச்சட்டியும், கரகமும் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அவர்களே நேரடியாக அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க.,மாவட்ட செயலாளரும், வேளாண் பல்கலைக்கழக உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜூணன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். விழாவில் நகர்மன்ற தலைவர் சத்தியபாமா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பானுமதி, குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களையும், மைசூர், கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிக்கம்மன் உபவாசகர் நீலமலை ஆதினம் கோபால்சாமி அடிகளார் செய்திருந்தார். விழாவினையொட்டி ஜீ-1 காவல் நிலையம் சார்பில் சிறப்பான பதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்