முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ராணுவத்தி னர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.31 - இந்தியாவில் இலங்கை ராணுவத்தினர்களுக்கு பயிற்சி அளிப்பது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. அதனால் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டபடி இலங்கை ராணுவத்தினர்களுக்கு பயிற்சி அளிப்பதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர். 

இலங்கையின் போக்கு மாறிவிட்டது. காடாக கிடந்த இலங்கையை நாடாக்கியவர்கள் தமிழர்கள். அவர்களை அந்த நாட்டை விட்டு விரட்டியடிக்கும் அடாவடித்தனத்தில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் எதிரியான சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நட்பு கொண்டாடி வருகிறது. முக்கிய காண்ட்ராக்ட்கள், கடல்சார் பணிகளை சீனாவுக்கு கொடுத்து வருகிறது. கொழும்பு நகரின் மத்திய பகுதியில் இந்திய பணிக்காக ஒதுக்கிய நிலத்தை சீனாவுக்கு கொடுத்துவிட்டது. அதோடுமட்டுமல்லாது போர் ஓய்ந்த பின்னரும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் சிங்கள ராணுவம் சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இப்படி தமிழர்களுக்கெதிராக செயல்படும் சிங்கள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் ரகசியமாக பயிற்சி அளித்து வருகிறது. சென்னையில் உள்ள தாம்பர ராணுவ பயிற்சி நிலையத்தில் சிங்கள ராணுவத்தினர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது தெரியவந்தது. உடனே முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கண்டன கடிதம் எழுதினார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும்படி மத்திய அரசு நடந்து கொள்ளக்கூடாது. சிங்கள ராணுவத்தினர்களுக்கு இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்லாது எந்த மாநிலத்திலும் பயிற்சிஅளிக்கக்கூடாது என்றும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார். இந்த கடிதம் எழுதி ஒருசில மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் ஊட்டியில் சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது தெரியவந்தது. உடனே முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள அதிகாரிகளுக்கு ஊட்டியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிந்தேன். இது முற்றிலும் தமிழர்களை அவமதிக்கும் செயல். பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார். 

இந்தநிலையில் இலங்கை அதிகாரிகளுக்கு ஊட்டியில் பயிற்சி அளிக்கும் பிரச்சினையை பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எழுப்பினர். லோக்சபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து சபையின் மத்திய பகுதிக்கு சென்று இலங்கை அரசுக்கு எதிராக கோஷம்போட்டதோடு முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது போல் தமிழ்நாட்டில் சிங்கள அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் எந்தவித பயிற்சியையும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இதனால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ராஜ்யசபையிலும் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் மத்திய அரசை அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்