முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்கால திட்டம் என்ன? சச்சின் டெண்டுல்கர் பேட்டி

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஆக. 6 - எதிர்கால திட்டம் என்ன? ஓய்வு முடிவு எப்போது? என்பது குறித்து அடுத்த மாதம் அறிவிப்பேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார். மும்பையில் நிருபர்களைச் சந்தித்த டெண்டுல்கர் அவர்களது கேள்விக்கு பதி ல் அளிக்கையில் இது குறித்து தெரிவித் ததாவது - 

கடந்த 22 ஆண்டுகளாக நமது நாட்டிற் காக நான் விளையாடி வருகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது பெரு மிதமும், கெளரவமும் மிக்க செயலா கும். 

என்னால் சிறப்பாக விளையாட முடிய வில்லை என்பதை நான் உணரும் போது, நான் விளையாடுவதை நிறுத் திக் கொள்வேன். 

நான் ஓய்வு பெற வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். ஓய்வு விஷயத் தில் என் மனம் கூறும் போக்கில் செல் லவே நான் விரும்புகிறேன். 

தற்போது நான் நல்ல நிலையில் உள்ள தாகவே எனது மனம் கூறுகின்றது. வரு ம் நவம்பர் மாதத்தில் நான் விளையா  டிய பிறகு, மீண்டும் ஒரு முறை என் மனம் என்ன சொல்கிறது என்பதை மறு ஆய்வு செய்வேன். 

நான் விளையாடுவதை நிறுத்தும் போ து, நான் சரியாக விளையாட வில்லை யோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவ தை நான் விரும்பவில்லை. 

ஓய்வு என்பது எனக்கு கடினமானதாக இருக்கும் என கருதுகிறேன். ஏனென்றால் ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்பதை நான் இதுவரை முடிவு செய்யவில்லை. 

என்னால் முடியும் என்ற எண்ணம் உள்ளவரை தொடர்ந்து நீடிப்பேன். வெற் றியை அடைவதற்கான குறிக்கோள் என்னிடம் உள்ளதா? அணியில் உச்சவ ரிசையில் நீடிப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா  என்பதை நமது அணியினர் உணர்வதைப் பொறுத்தும் எனது ஓய்வு திட்டம் இருக்கும் . 

என்னைப் பற்றி மற்றவர்கள் கூறும் கரு த்துக்களில் இருந்து நான் விலகி நிற்க வே நான் விரும்புகிறேன். நம்மை விமர்சிப்பவர்களையும், துதிப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் அதிக கவ னத்துடன் விளையாட்டில் முன்னேற வேண்டும் என்பதையே நான் விரும்பு கிறேன். 

வரும் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது ஓய்வு பற்றி அறிவிப்பேனா என் பது குறித்து இப்போதைக்கு ஒன்றும் கூறுவதற்கு இல்லை. 

அடுத்த மாதத்திற்குப் பிறகு எனது விளையாட்டை நானே மறுமதிப்பீடு செய்து ஓய்வு பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்