முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் செல்வராகவன் முன்ஜாமீன் மனு தாக்கல்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.17 - சேலம் ஏ.சந்திரசேகர் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் செல்வராகவன் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார். இயக்குனர் செல்வராகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்ஜாமீன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டு காசிமேடு என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்க கஜினி படத்தின் தயாரிப்பாளர் சேலம்.ஏ.சந்திரசேகரனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

அந்த ஒப்பந்தப்படி அப்படத்தை நான் இயக்குவதற்கு சம்பளமாக 2 கோடி ரூபாய் பேசப்பட்டதது. அந்த தொகையில் 90 லட்சம் ரூபாய் முன் பணமாக எனக்கு தரப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் ஆந்த படத்தின் தயாரிப்பு பணி பாதியிலேயே நின்று விட்டது. இதையடுத்து எனக்கு தந்த 90 லட்ச ரூபாய் முன்பணத்தை சேலம் ஏ.சந்திரசேகர் திருப்பிக் கோட்டார்.

அந்த தொகையை முன்று தவணையில் நான் திரும்பி கொடுத்து விட்டேன். இருப்பினும் எனக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

எனக்கு 2 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அதில் 90 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்ததாகவும் மீதம் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் தரமறுக்கிறார் என்றும் அவர் புகார் அளித்தார்.

அதை விசாரித்த குற்ற பிரிவு போலீசார், சேலம் ஏ.சந்திரசேகர் அளித்த தகவல் தவறானது என்று சைதாப்பேட்டை மாஜிஸ்தி மேரட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் கோர்ட் சேலம் ஏ.சந்திரசேகர் புகார் மீது மீண்டும் விசாரணை நடந்த வேண்டும் என்று குற்றபிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை வத்து செய்ய கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு நிறுவையில் உள்ளது.

நான் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று அச்சப்படுகிறேன் எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என தனது மனுவில் தெரவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர்யலி முன்பு வந்தது.

இந்த வழக்கை அவர் நவம்பர் 1ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis