முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நானும் சேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்கள்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக். 26 - நானும், வீரேந்திர சேவாக்கும் இந்தியாவின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்று கவுதம் கம்பீர் தெரிவித்தார்.  இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக்கும், கம்பீரும் சமீப காலமாக சரியாக விளையாடுவதில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கம்பீர் பேசியதாவது, 

சமீப காலமாக நானும், சேவாக்கும் பங்கு கொள்ளும் தொடக்க ஆட்டம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. தொடக்க ஆட்டத்தில் இன்று வரை எங்களது சராசரியாக 53 ரன்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கூட இதுவே சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன். நிறைய தொடக்க ஆட்டக்காரர்கள் நீண்ட நாட்கள் ஆடியிருந்தாலும் இது போன்ற சராசரி வைத்திருந்ததில்லை. 53 ரன்கள் சராசரி என்பது போதவில்லை என்றால் சிறந்த தொடக்கத்திற்கு எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. சதமடித்தால் மட்டும் பெரிதாக பேசப்படுவது ஏன் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார். கம்பீர் கடைசியாக 2010 ல் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்