முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன் லீக்: டெல்லி அணி அரையிறுதியில் தோல்வி

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

டர்பன், அக். 27 - சாம்பியன் லீக் கிரிக்கெட் அரையிறுதியில் டெல்லி அணி தோல்வியடைந்தது. இதனால் ஏமாற்றத்துடன் வெளியேறியது. தென் ஆப்பிரிக்காவில் சேம்பியன் லீக் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. நேற்று முதலாவது அரையிறுதி போட்டி நடந்தது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், தென் ஆப்பிரிக்கா ஹைவெல்டு அணியும் மோதின. முதலில் ஹைவெல்டு மட்டையை பிடித்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் போடி அதிகபட்சமாக 50 ரன்களை எடுத்தார். அதன் பிறகு டெல்லி அணி 140 ரன்களை இலக்காக கொண்டு ஆடியது. ஆனால் தொடக்க வீரரான சேவாக் ரன் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் வார்னர் 21 ரன்களும், பீட்டர்சன் 50 ரன்களும் எடுத்தனர். ஆனால் பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆனார்கள். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களே எடுக்க முடிந்தது. 22 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. நேற்று 2 வது அரையிறுதி போட்டி நடந்தது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்றிரவு 9 மணிக்கு ஆரம்பித்தது. இந்த இரு அணிகளில் சிட்னி சிக்சர்ஸ்தான் முதல் நிலையாக விளங்குகிறது. இந்த போட்டி தேர்வில் இடம் பெற்ற 10 அணிகளில் இந்த அணி மட்டுமே அனைத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்