முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 3 அணு உலைகள் தற்காலிகமாக மூடல்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ. 2 - சாண்டி சூறாவளி ஏற்பட்டதையடுத்து அமெரிக்காவில் உள்ள 3 அணு உலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மற்றொரு அணு உலையில் மின் உற்பத்தியை எப்போது வேண்டுமானாலும் நிறுத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணு உலையில் கடல் நீர் புகுந்து கதிர்வீச்சு ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. நியூஜெர்சி அருகே உள்ள முக்கிய மின் நிறுவனமான பி.எஸ்.இ.ஜி. அணுமின் நிலையத்தின் ஒரு உற்பத்தி பிரிவும், நியூயார்க் அருகே உள்ள இரு அணுமின் நிலையங்களில் தலா ஒரு அணு உலையிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

அந்நாட்டிலேயே மிகப் பழமையான 43 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓய்ஸ்டர் கிரீக் அணு மின் நிலையம் உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்குமாறு அந்த அணு மின் நிலையத்துக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பிற அணு மின் நிலையங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஒரு சில அணு மின் நிலையங்களில் உற்பத்தி அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்