முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகள் வாங்க முதல்வர் ரூ.3 லட்சம் மானியம்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 26 - முதல்வர் ஜெயலலிதா நாகூர் தர்காவுக்காக சந்தனக் கட்டைகள் வாங்க ரூ.3 லட்சம் மானியமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை 23.11.2012 அன்று நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், 10​வது தலைமுறை பரம்பரை ஆதீனமுமாகிய ஹஸ்ரத் அல்ஹஜ் எஸ்.எஸ். காமில் சாஹிப் காதிரி சந்தித்தார்.  நாகூர் ஆண்டகையின் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டின் ஜமாத்துல் ஆகிர் மாதத்தில் நடைபெறுகிறது என்றும், புனித சமாதியில் சந்தனக்கூடு நாளன்று சந்தனக் கட்டைகள் அரைத்து சந்தனம் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சமாதியில் nullசப்படுகிறது என்றும், இந்த சந்தனம் nullசும் விழா மிக மிக புனிதமானது என்றும் தெரிவித்து, இவ்விழாவிற்கு புனித சமாதியில் nullசுவதற்காக சுமார் 40 கிலோ சந்தனக் கட்டைகள், 3 லட்சம் ரூபாய் செலவில் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும், புனிதமிக்க ஹஸ்ரத் ஆண்டகையின்  சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழாவின்போது புனித சமாதியில் சந்தனம் nullசுவதற்காக வாங்கப்படும் சந்தனக்கட்டைகளை மானியமாக அரசு வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தார். நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், பரம்பரை ஆதினமுமாகிய ஹஸ்ரத் அல்ஹஜ்  எஸ். எஸ். சையத் காமில் சாஹிப் காதிரியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நாகூர் ஆண்டகை பெரிய கந்தூரி விழாவின் சந்தனக்கூடு நாளன்று புனித சமாதியில் nullசும் உபயோகத்திற்காக தேவைப்படும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 40 கிலோ சந்தனக் கட்டைகளை விலையேதும் இல்லாமல் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்