முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாவது நாளாக வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

வேதாரண்யம் டிச.19 - வேதாரண்யம் தாலுக்காவைச் சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லாததால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா கடலில் கற்றழுத்து தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இந்த நிலையில் வேதாரண்யம் தாலுக்காவைச் சேர்ந்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மீனவர் கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இதனால் மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள் அந்த அந்த பகுதியில் உள்ள கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கோடியக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு கடல் சீற்றத்தில் நங்கூரத்தை அறுத்துக் கொண்டு கடலில் சென்று விட்டது. இந்த படகில் ஆயிரத்து ஐநூறு கிலோ எடையுள்ள வலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளுர் மீனவர்கள் 6 படகுகளில் சென்று கடலில் மாயமான படகை மீட்டு வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்