எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஏப்.17 - சித்திரை திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மதுரை மீனாட்சிக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கல்யாண காட்சியை தரிசித்தனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் தினந்தோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது இந்த கோவிலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலின் திருவிழாக்களில் சித்திரை திருவிழாவும்,திருக்கல்யாணமும் உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த வியாழக்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திக் விஜயம் நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமியும் அம்மனும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் 10 ம் நாளான நேற்று மாணிக்க மூக்குத்தி மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை 10.30 மணியில் இருந்து 10.59க்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்திற்காக சுந்தரேசுவரரும், ப்ரியாவிடையும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்தனர். முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர். அதிகாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு சுவாமி, ப்ரியாவிடை, மீனாட்சி அம்மன் வந்தனர். இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த முருகப்பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
குலசேகரபட்டர் வழி சிவச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டி பட்டர் வழிச்சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் அணிந்து கல்யாணத்தை நடத்தினர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாதபூஜை செய்தார். பின்னர் காப்புகட்டிய கணேஷ்பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்தார். பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்யபூஜை போன்றவை நடைபெற்றது. சுவாமி,ப்ரியாவிடை, மீனாட்சிக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. இதன்பிறகு சுவாமியும், அம்பாளும் மூன்று முறை மணவறையை சுற்றி வந்து மாலை மாற்றிக்கொண்டனர். சுவாமி, ப்ரியாவிடைக்கும், மீனாட்சிக்கும் பட்டு வஸ்திரமும், பட்டு சேலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எப்போது மாங்கல்ய நாண் பூட்டு நிகழ்ச்சி நடைபெறும், அந்த கண்கொள்ளா காட்சியை காண்போம் என்ற பேராவலில் இருந்த பக்தர்களின் கண்களுக்கு இனிய நிகழ்வாக, மேளம் தாளங்கள் முழங்க, வேதமந்திரங்கள் விண்ணை பிளக்க 10.55 மணிக்கு மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சியின் கழுத்தில் சுந்தரேசுவர கடவுள் மங்கள நாணை பூட்டினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாயே, மீனாட்சியே காப்பாற்ம்மா என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டனர்.
இதை தொடர்ந்து திருக்கல்யாணத்தை காணவந்த பெண்கள் தங்கல் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்து புதிய மஞ்சள் கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிவிந்து கொண்டனர். சில தம்பதியினர் தனது கணவனின் கையில் புதிய திருமாங்கல்யத்தை கொடுத்து அணிவிக்கச்செய்தனர். திருக்கல்யாணம் முடிவடைந்ததும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதன் பிறகு மீனாட்சியும், சுந்தரேசுவரரும் தம்பதியர் சகிதமாக ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். இங்கும் மாலை வரை ஏராளமான பக்தர்கள் வந்து கல்யாண கோலத்தில் இருந்த அன்னையையும், அப்பனையும் தரிசித்து சென்றனர். திருக்கல்யாணத்தையொட்டி கோவிலுக்குள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மேலும் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை காண சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர். ஆடிவீதி முழுவதிலும் பெரிய டிவிக்கள்வைக்கப்பட்டு திருக்கல்யாண காட்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருக்கல்யாணம் முடிந்து நேற்று மாலை அம்மனும், சாமியும் பூப்பல்லக்கில் எழுந்தருளினர். இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. சிறிய தேரில் மீனாட்சியும், பெரிய தேரில் சுந்தரேசுவரும், ப்ரியாவிடையும் எழுந்தருளுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
17-ம் தேதி கரூர் செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய் உயரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்
12 Oct 2025கரூர் : த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ம் தேதி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு உயரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Oct 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16 -ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலை சேர்ந்த பிணைக்கைதிகள் 20 பேரை விடுவிக்க ஹமாஸ் முடிவு
12 Oct 2025காசா : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட போராட்டக்குழு முடிவு
12 Oct 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ஜவுளிக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
12 Oct 2025சென்னை : நெருங்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
-
இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது
12 Oct 2025லக்னோ : இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்: மூத்த வழக்கறிஞர் பராசரனுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகழாரம்
12 Oct 2025சென்னை : சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
-
பள்ளிகளில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டம் குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறத
-
இந்தியா-ஆப்கான் கூட்டறிக்கை: ஆப்கன் தூதரிடம் பாக்., கண்டனம்
12 Oct 2025இஸ்லாமாபாத் : இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
-
உபரிநீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.18 அடியை எட்டியது
12 Oct 2025மேட்டூர் : கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில்
12 Oct 2025நெல்லை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை
12 Oct 2025ஒகேனக்கல் : வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
12 Oct 2025மதுரை : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
-
3 கத்தார் தூதர்கள் விபத்தில் பலி
12 Oct 2025எகிப்து : எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர்.
-
ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டம்
12 Oct 2025ராமேசுவரம் : இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் தாயகம் திரும்புகின்றனர்
12 Oct 2025காசா : காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
-
58 பாக்., வீரர்களை கொன்று 25 ராணுவ முகாம்களை கைப்பற்றியது ஆப்கான்
12 Oct 2025காபூல் : தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்
-
நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம் மதுரை வந்தது
12 Oct 2025மதுரை : பா.ஜ.க.
-
தீபாவளி பண்டிகை, சட்டமன்ற தேர்தல்: சொந்த ஊர் செல்ல தயாராகும் பீகார் மாநில தொழிலாளர்கள்
12 Oct 2025திருப்பூர் : வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தம
-
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
12 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், அவர்கள் இன்றைக்குள் க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Oct 2025சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்திலுள்ள ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
விஜய்யுடன் செல்போனில் பேசினேனா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
12 Oct 2025சேலம் : "த.வெ.க.வினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.