முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் ஆக்கிரமிப்பு: நடிகர் வடிவேலு மனைவிக்கு நோட்டீஸ்

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

காஞ்சிபுரம், டிச. 29​ - அரசின் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக: நடிகர் வடிவேலு மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மணி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 200 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடங்களை மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை சேர்ந்தவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து ஆந்திர விவசாயிகளுக்கு விற்று விட்டனர். அதில் ஆந்திர மாநில விவசாயிகள் விவசாயம் செய்து வந்தார்கள்.

பிறகு, அந்த இடங்களை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு ஆந்திர விவசாயிகள் விற்று விட்டார்கள். நடிகர் வடிவேலு மனைவி விசாலாட்சியும் அந்த இடத்தை வாங்கியுள்ளார். சுமார் 130 ஏக்கர் அரசு புறம் போக்கு நிலத்தில் நடிகர், நடிகைகளும் தனியாரும் வேலி போட்டு தனித்தனியாக பண்ணை வீடுகள் அமைத்துள்ளனர்.

தேக்கு, தென்னந் தோப்புகளையும் உருவாக்கி உள்ளார்கள். புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த 19 பேருக்கு அரசு வருவாய்த்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் பட்டியலில் வடிவேலு மனைவி விசாலாட்சியும் இருக்கிறார். அரசு புறம்போக்கு நிலத்தை வரும் 15​ந்தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீசில் படப்பை வருவாய் துறை துணை ஆய்வாளர் சின்னத்துரை குறிப்பிட்டு உள்ளார்.

புஷ்பகிரி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக 150 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், வருவாய் துறையினர். இப்போது தான் நடவடிக்கை எடுக்கின்றனர் என்றும் பொது மக்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony