முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு டாக்டர் பட்டம்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

நெல்லை,ஜன.10 - நெல்லை பல்கலைகழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நாளை 11ந்தேதி  நடைபெறுகிறது. இதில் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்று நெல்லை பல்கலைகழக துணை வேந்தர் குமரகுரு செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் இது குறித்து துணை வேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மனோன்மணியம் சுந்தரானார்பல்கலைக்கழகத்தின் 20வது பட்ட மளிப்புவிழா நாளை 11ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கு தமிழக கவர்னர் ரோசய்யா தலைமை தாங்குகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழக பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மைகட்டுப்பாட்டு அதிகாரியும், விஞ்ஞானியுமான சிவதாணுபிள்ளை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமி;ழ்தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் 482 நபர்களுக்கு பி.எச்.டி.பட்டம் வழங்கப்படுகிறது.மேலும் 1400 நர்களுக்கு எம்.பில்.,பட்டமும்,644 நபர்களுக்கு முதுகலை பட்டமும், 19 ஆயிரத்து 195 நபர்களுக்கு இளங்கலை பட்டம் என மொத்தம் 27 ஆயிரத்து 521 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.இதில்136 பேர்களுக்கு மெடல்களும், அருணா, சுபலட்சுமி, ரெபேகாமனோகரன், அருணா ராஜேஷ்ஸ்ரீ ஆகிய 4 பேருக்கு 2 மெடல்களும் வழங்கப்படுகிறது. இவ்வாறு துணைவேந்தர் குமரகுரு கூறினார். பேட்டியின் போது பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) கோவிந்தராஜு, தேர்வாணையர் பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago