முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலுசிஸ்தான் மாகாண அரசு டிஸ்மிஸ்: பாக்., பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன. 16 - பாகிஸ்தானின் எல்லையோர பலுசிஸ்தானில் அண்மையில் தொடர் குண்டு வெடிப்புகளால் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாகாண அரசை பிரதமர் ராஜா பர்வேஷ் முஸ்ரப் டிஸ்மிஸ் செய்திருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமையன்று பலுசிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட ஷியா முஸ்லிம்கள் பலியாகினர். ஆனால் பலுசிஸ்தான் அரசை டிஸ்மிஸ் செய்யும் வரை இழந்த உறவுகளை அடக்கம் செய்ய மாட்டோம் என்று ஷியா முஸ்லிம்கள் போராட்டத்தில் ்ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வெடித்து அரசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியது.

இதைத் தொடர்ந்து அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க தவறிய காரணத்துக்காக பலுசிஸ்தான் மாகாண அரசு டிஸ்மிஸ் செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. பலுசிஸ்தானத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே காலத்தில்தான் இந்திய எல்லையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!