முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அரசு மீது பேராசிரியர் தொ.பரமசிவம் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

நெல்லை ஏப்-24 - இலங்கை படுகொலை குறித்த ஐ.நா.சபையின் அறிக்கையை வெளியிடாமல் தடுக்க இந்தியா துணைபோவதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் தொ.பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்களித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது:

       இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு. எனவே மத்திய அரசு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கை தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா.தயார் செய்துள்ள அறிக்கை வெளியிட கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று இலங்கை காலில் விழுந்து கெஞ்சுகிறது. ஆனால் ஐ.நா. இலங்கையின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இருந்த போதிலும் இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்த அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே அந்த அறிக்கையை வெளியிடாமல் தடுக்க இந்தியாவும் துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்கப்படவேண்டும். இது தான் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. எனவே ஐ.நா. அறிக்கையை உடனடியாக வெளியிடவேண்டும். இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சாபில் இன்று(24ம்தேதி) பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மகேந்திரன், இலங்கை தமிழர் பகுதிக்கு நேரடியாக சென்று வந்த வக்கீல் கயல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சயின் மாநில குழு உறுப்பினர் சேவியர், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம், வக்கீல் பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்