முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஒரு தவறு மட்டுமல்ல - நடவடிக்கை ஏன் கிளார்க் விளக்கம்!

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஆஸ்திரேலியா, மார்ச் - 13 -  ஷேன் வாட்சன், பேட்டின்சன், ஜான்சன், கவாஜா ஆகியோர் சொல்பேச்சுக் கேட்பதில்லை என்று ஒழ்ங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதற்கு கடும் அதிருப்திகளும் சில எதிர்பாரா பாராட்டுகளும் எழுந்துள்ளன.  கிளார்க் விளக்கம் அளிக்கையில், ாஇது ஒரு கடினமான நாள், ரசிகர்களும் ஊடகங்களும் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். இந்த நடவடிக்கை ஏதோ இந்த ஒரு தவறினால் மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். ாஎங்கள் ஆட்டம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது. களத்திற்கு வெளியே சில விவகாரங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவகையில் இல்லை. ஆஸ்ட்ரேலிய அணிக்கென்று தரநிலைகள் உள்ளன. அதனை பராமரிக்காத எந்த ஒருவரும் அதன் விளைவுகளை சந்தித்தே தீரவேண்டும்ா என்றார் கிளார்க். ஆனால் அந்த நான்கு வீரர்களும் செய்த பிற தவறுகள் என்னவென்பதை கிளார்க் தெரிவிக்காமல் மழுப்பினார். ாதரமற்ற நிலையை நாங்கள் ஏற்கப்போவதில்லை. இது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணி. நான் பரபட்சமாக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் மற்ற அணிகளுக்கும் ஆஸ்ட்ரேலிய அணிக்கும் வித்தியாசம் உள்ளது. ஆஸ்ட்ரேலியாவுக்கு விளையாடுகிறொம் என்றால் தரம், ஒழுக்கம், விளையாட்டுக்கேயுரிய பண்பாடு ஆகியவையும் சேர்த்துதான்! தலைமைப் பயிற்சியாளர் ஒரு சாதாரண்மான விஷயத்தையே கேட்கிறார். அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்யப் போகிறீர்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். ஏனெனில் அனைவரும் தங்கள் ஆட்டத்தை பற்றி ஏதாவதொரு கருத்து வைத்திருக்கவேண்டும். என்னை பொருத்தவரையில் இந்த 4 வீரர்களும் இதனை செய்யாதது தவறுதான், இது அணியை ஒட்டுமொத்தமாக பின்னடையச்செய்வதுடன், தலைமை பயிற்சியாளருக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று ஆகிறது. ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணியில் இது சாத்தியமில்லை, ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்