முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை - பி.டி.அரசகுமார்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.22 - வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகஅகில இந்திய தேசிய பார்வர்டு கட்சியின் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் மதுரையில் தெரிவித்தார்.

  இதுகுறித்து அகிலஇந்திய தேசியபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனதலைவர் பி.டி. அரசகுமார் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அகில இந்தியதேசிய பார்வர்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர பகுதிகளில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் 160 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தென்மாவட்ட மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், தென்மாவட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காகவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அகிலஇந்திய தேசிய பார்வர்டுகட்சி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

   இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது எங்களுக்கு உரிய தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கி தரும் என நம்புகிறோம். அவ்வாறு தராதபட்சத்தில் தேசிய பார்வர்டு பிளாக் சார்பில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதென முடிவு செய்துள்ளோம். கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே இந்த தேர்தலில் வேட்பாளர்களாக  போட்டியிடுவார்கள்  வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் நாங்கள் பல ஆண்டுகளாக கோரிவரும் மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன்முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்டவேண்டும். இல்லாவிடில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

   இந்த செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய தேசிய பார்வர்டுபிளாக் கட்சியின் மாநில அவைத்தலைவர் ராஜபாண்டியன், மாநில பொருளாளர் கருப்பையா, மாநில இளைஞர் அணி செயலாளர் பி.டி.ரவி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் திருக்கிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட செயலாளர் பால்பாண்டி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago