முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

65 பாகிஸ்தானியர்கள் தங்கியிருக்க மத்திய அரசு அனுமதி

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.29 - போதுமான பயண ஆவணங்கள் இல்லாததால் திகார் சிறையில் இருக்கும் 65 பாகிஸ்தான் நாட்டவரை மேலும் 3 மாதங்களுக்கு தங்கியிருக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 65 பாகிஸ்தானியர்கள் டெல்லி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஐ.நா. மனித உரிமை கமிஷன் அகதிகள் என்ற அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. இதனால் இவர்களை விடுதலை செய்ய தேவையான பயண ஆவணங்கள் வேண்டும். ஆனால் அவர்களிடம் அந்த ஆவணங்கள் இல்லை. இதனால் இவர்களை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வக்கீல் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த பாகிஸ்தானியர்களை அகதிகள் என்று ஐ.நா. மனித உரிமை அகதிகள் கமிஷன் அந்தஸ்து கொடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக அந்த கமிஷனிடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் வந்துள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் மேலும் 3 மாதங்களுக்கு இந்தியாவில் தங்கியிருக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முக்தா குப்தா இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வருகிற மே 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

போதுமான ஆவணங்களை தர ஐ.நா. மனித உரிமை அகதிகள் கமிஷன் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் அதனால் இவர்களை இந்தியாவில் மேலும் 3 மாதங்களுக்கு  தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானியர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மீனாட்சி அரோரா கேட்டுக்கொண்டார். இதை அடுத்து இவர்களுக்கு இந்த கால அவகாசத்தை  மத்திய அரசு கொடுத்துள்ளது.அது ஐகோர்ட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்