முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 புக்கிகளுக்கு போலீஸ் காவல் - நாசிக் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 மே 2013      இந்தியா
Image Unavailable

நாசிக், மே. 25 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 புக்கிகளை இன்று 25 ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க மராட்டிய மாநிலம் நாசிக் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது பந்தயத்தில் ஈடுபட்டதாக ராஜேந்திர சாவ்னா, சமீர் மகேந்திரா, பிரவீண் புட்டாடா, ரவீந்திர தாஹே, பங்கஜ் சோமானி ஆகிய 5 புக்கிகள் மாராட்டிய மாநிலம் நாசிக் சாலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்த 5 புக்கிகளும் நாசிக் நகரில் உள்ள கோர்ட்டில் வியாழக் கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை இன்று வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கைது செய்யப்பட்ட இந்த 5 புக்கிகளிடம் இருந்து 20 மொபைல் போன்கள், 3 லேப்டாப்கள், ஒரு டி.வி. ஒரு பென் டிரைவர் மற்றும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பங்களாவில் போலீசார் ரெய்டு நடத்தினர். அப்போது இந்த 5 புக்கிகளும் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மேற்கண்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனிடையே நேற்று சென்னையிலும் மேலும் 2 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். சாப்பாட்டை கூட மறந்து வாயை பிளந்து கொண்டு ரசிகர்கள் இந்த ஆட்டத்தை பார்த்து வருகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் சூதாட்டம் பற்றி செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படி இருந்தும் ரசிகர்கள் இன்னமும் அந்த ஆட்டத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் மர்மம்தான் புரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்