முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர தேர்தல் பிரசாரத்தில் நடிகர் சிரஞ்சீவி மீது செருப்பு, முட்டை வீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      இந்தியா
Image Unavailable

கடப்பா, மே. - 1  - ஆந்திர இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் சிரஞ்சீவி மீது செருப்பு மற்றும் முட்டை வீசப்பட்டன. இது தொடர்பாக ஜெகன் மோகன் கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி சில மாதங்களு க்கு முன்பு விலகினார். அத்துடன் அவரது கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அதைப் போல அவரது தாயார் விஜயலட்சுமியும் காங்கிரசில் இருந்து விலகினார். அவர் புலிவெத்துலா சட்டசபை தொகுதி எம்.எல். ஏ. வாக இருந்தார். அதையும் அவர் ராஜினாமா செய்தார்.
இந்த 2 தொகுதிக்கும் மே 8 -ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. கட ப்பா பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தான் புலிவெத் துலா சட்டசபை தொகுதியும் அடங்கியுள்ளது. கடப்பா எம்.பி. தொகுதியில் மீண்டும் ஜெகன் மோகன் ரெட்டி போ  ட்டியிடுகிறார். இங்கு இவருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
அதைப் போல சட்டமன்ற தொகுதியிலும் 2 கட்சிகளுக்கும் இடையே தான் நேரடி போட்டி உள்ளது. இந்த தேர்தல் ஜெகன் மோகன் ரெட்டி க்கு ஒரு அக்னி பரீட்சை ஆகும்.
ஏனென்றால், இவர் கட்சித் தொடங்கிய பிறகு, சந்திக்கும் முதலாவது தேர்தல் இதுவாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்து வரக் கூடி ய பொதுத் தேர்தலை சந்திக்க ஒரு உந்து சக்தியாக அமையும். இதற் காக, அவர் கடும் பாடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியும் இவரை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று முயன்று வருகிறது. சமீபத்தில் இக்கட்சியில் இணைந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி தீவிர பிரசாரத்தில் உள்ளார். நேற்று முன் தினம் புலிவெத்துல்லா தொகுதியில் இரவு 9 மணியளவி ல் பிரசாரம் செய்தவாரே வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. புல்லாரெட்டி மருத்துவமனை சதுக்கத்தில் பேசிய போது, அவருக்கு எதிராகவும், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாகவும் அங்கு கூடியி ருந்தவர்கள் கோஷம் போட்டனர்.  பின்னர் வாகனங்களை நோக்கி செருப்பு, முட்டை ஆகியவற்றை வீசி னார்கள். இந்தப் பொருள்கள் சிரஞ்சீவி மீது விழவில்லை. ஆனால் அவருடன் வந்த டி.எல். ரவீந்திர ரெட்டி என்ற தலைவர் மீது விழுந்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரகளை செய்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீ வியை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony