முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை லீனாவை போலீஸ் காவலில் ஒப்படைக்க மனு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - விசாரணைக்காக நடிகை லீனா மரியாவை போலீஸ் காவலில் ஒப்படைக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர். அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்தது மற்றும் சேலையூரில் சக்கரவர்த்தி என்பவரிடம் ரூ.75 லட்சம் சுருட்டியது ஆகிய 2 வழக்குகளில் நடிகை லீனா மரியா கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் பிடிபட்ட அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பிரபல மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகருக்கு விரித்த வலையில்தான் லீனா சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுகாஷ் பற்றி பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அதே நேரத்தில் தன்னை மிகப்பெரிய டைரக்டர் என்று சுகாஷ் கூறியதால் அவரை நம்பி நானும் மோசம் போய்விட்டேன் என்றும் லீனா வாக்குமூலம் அளித்தார்.

சுகாஷ் இன்னும் பிடிபடாத நிலையில், அவரை பற்றி தகவல்களை திரட்டுவதற்காக லீனாவை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று அல்லது நாளை கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.

டெல்லியில் லீனா கைது செய்யப்பட்டபோது சுகாசின் பாதுகாவலர்களான முன்னாள் ராணுவ வீரர்கள் 4 பேரும் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டெல்லியில் பத்தேபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாவலர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேரும், மோசடி மன்னன் சுகாஷ் சென்ற இடங்களுக்கெல்லாம் துப்பாக்கியுடன் பாதுகாப்பாக சென்றிருப்பது தெரியவந்தது.

தனி நபர் ஒருவர் தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் துப்பாக்கி உரிமம் வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் அனுமதியின்றி துப்பாக்கியுடன் சுற்றித்திரியும் பாதுகாவலர்களை வைத்துக் கொள்வது சட்ட விரோதம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சுகாஷ் மீது ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதில் அவரை கைது செய்ய டெல்லி போலீசும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் சுகாஷ் மீதான பிடி இறுகியுள்ளது. மோசடி மன்னன் சுகாஷ் மீது சேத்துப்பட்டு போலீசார் ஏற்கனவே 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் போட்டுள்ள 2 வழக்குகளுடன் சேர்த்து அவர் மீது சென்னையில் 5 வழக்குகள் பதிவாகியுள்ளது.

மதுரையில் ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்திலும், கோவை மாவட்ட குற்றப்பிரிவிலும் சுகாஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ள நிலையில் 15 வழக்குகள் அங்கு பதிவாகியுள்ளது. இதுதவிர அரியானா, ஐதராபாத், மும்பை, டெல்லியிலும் சுகாஷ் மீது மோசடி வழக்குகள் உள்ளன. டெல்லியில் செட்டில் ஆவதற்கு முன்னர் சுகாஷ் மும்பையில் சில ஆண்டுகள் லீனாவுடன் வசித்து வந்தார். அந்த வீட்டின் முன்னால் லீனா- சேகர் இல்லம் என்ற போர்டையும் தொங்க விட்டுள்ளனர்.

இங்கு வசித்தபோது, தனது பாணியில் மும்பையிலும் சுகாஷ் கைவரிசை காட்டியுள்ளார். பின்னர்தான் அங்கிருந்து டெல்லிக்கு தப்பிச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago