மராண்டியின் சாகும்வரை உண்ணாவிரதம் நீடிப்பு

Jharkhand-map

 

ராஞ்சி, மே 6 - ஜார்க்கண்ட் மாநில அரசின் ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள  பாபுலால் மராண்டி நேற்றும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வசிப்பதற்கு இடமில்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் தரப்படும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள் கொடுக்கப்படவில்லை.

பல ஆண்டுகளாக தாங்கள் குடியிருந்த  வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மட்கோரியா என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  பலர் கொல்லப்பட்டனர். 

இதேபோல இஸ்லாம் நகர் என்ற இடத்திலும்   நடந்த ஆர்ப்பாட்டத்திலும் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இதை அடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண கோரி, பாபுலால் மராண்டி ராஞ்சியில் தனது சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.

உண்ணாவிரதத்தை கைவிடும்படியும்  பிரச்சினைக்கு  தீர்வுகாண பேச்சு வார்த்தை நடத்தலாம் என்றும் ஜார்க்கண்ட்  அரசு  பாபுலால் மராண்டிக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த அழைப்பையும் ஏற்க மராண்டி மறுத்து விட்டார்.

அவர் நேற்று 5-வது நாளாக தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ