முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா நாளை இப்தார் விருந்து அளிக்கிறார்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.4 - முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் இப்தார் விருந்து அளிக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலுடன் தலைமைக்கழகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களை   கெளரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,  முதலமைச்சர் ஜெயலலிதா வருகின்ற    5.8.2013 - திங்கட் கிழமை அன்று மாலை சென்னை,  டுந சுடிலயட ஆநசனைநை ெழடிவநட-லில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.   

இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள்,அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், அஇஅதிமுக மாவட்டக் கழகச்செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், 

வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தலைமை கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்