தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி, ஆக.11 - மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சுருளி அருவி சாரல் திருவிழாவை துவக்கிவைத்து பேசுகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த நிதியாண்டில் சுமார் ரூபாய் 154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவி தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் பிரசித்துப்பெற்ற ஸ்தலமாகும் இவ்வருவிக்கு மிக பழமையான வரலாற்றுச் சிறப்பு உண்டு. இங்கு சித்தர்களும் யோகிகளும் வந்துசென்ற சிறப்பு வாய்ந்த இடமாகும். தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களான கும்பக்கரை அருவி, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற வகையில் புங்ைகாக்களை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
மேலும் மேகமலைக்குச் செல்லுகின்ற தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்காக ரூபாய் 90 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 அரசு கலைக்கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் 11 தொழில்நுட்ப கல்லூரிகளையும் அமைக்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த வாரம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேக்கம்பட்டியில் புதிதாக தொழில்நுட்ப கல்லுரியில் வகுப்புகள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஐந்து அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தினை அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள் அவற்றில் போடிநாயக்கனுனூர் ஒன்றாகும். தேனி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக 1500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டையினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் தமிழக அரசு மேற்கொள்கின்ற அணைத்து வளர்ச்சிப்பணிகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சுருளி அருவி சாரல் திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் பிற துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் திறந்துவைத்து பேசியபோது தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்துத்துறை வளர்ச்சிகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் மக்களை கவருகின்ற வகையில் ம்ேபடுத்துவதற்காக போதிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சுற்றுலா விழாக்களை அந்த மாவட்டத்திற்கு தகுந்தாற்போல் நடத்திட ஆணை பிறப்பித்துள்ளார்கள். அந்;த அடிப்படையில் இன்றைய தினம் தேனி மாவட்டம் சுருளி சாரல் திருவிழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா விழாக்களை நடத்துவதற்கு காரணம் கண்ணிற்கு குளுமையினையும், இதயத்திற்கு இனிமையினையும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலா விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாண்டில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அதேபோன்று குற்றாலம், ஓகேனிக்கல் மற்றும் சுருளி அருவியில் அதிகமான நீர் கொட்டுவதால் அவற்றில் நீராடுவதற்காக ஆயிரக்கனக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.
தேனி மாவட்டம் அதிகப்படியான சுற்றலா பயனிகளை கவருகின்ற வகையில், கும்பக்கரை அருவி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை ஆகிய ஸதலங்கள் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான சுற்றுலா பயனிகள் வருகை தருவதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களது கோர்யீக்கையினை அறிக்கையாக பெற்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கருத்துரு தயாரித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டுசென்று சுற்றுலா ஸ்தலங்களில் அடிப்படை தேவைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றைய விழாவில் அனைத்துத்துறைகளின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு கண்கவர் காட்சிகளை அமைத்துள்ளார்கள். குறிப்பாக தோட்டாக்கலைத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்பட்ட கர்னல் பென்னிகுவிக் மணிமண்டபத்தின் மாதிரியை காய்கறிகளைக் கொண்டு நேர்த்தியாக அலங்கரித்துள்ளார்கள.; அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவீண்குமார் அபினபு, இ.கா.ப. அவர்கள், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.லாசர் அவர்கள், கம்பம் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.தங்க முருகன் அவர்கள், சுருளிபட்டி ஊராட்சிமன்றத்தலைவர் திரு.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.முருகேசன் அவர்கள், கம்பம் நகர்மன்றத்தலைவர் திரு. சிவக்குமார் அவர்கள்,; மேகமலை வன உயிரின காப்பாளர் திரு.வெங்கிடசாமி அவர்கள், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிவ.ஜானகி அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மகாலிங்கம் அவர்கள், துணைத்தலைவர் திரு.ஆண்டி அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எம்.ஆர்.்ஸ்வரன் அவர்கள், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமதி.்ஸ்வரி பாலன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.என்.ரமேஷ், வட்டாட்சியர் திரு.தனலிங்கம் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜீவரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஜெ.விஜயாராணி அவர்கள வரவேற்புரையாற்றினார், சுற்றுலா அலுவலர் திரு.குணசேகரன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 1 day 1 hour ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 5 days 5 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 1 day ago |
-
டி-20 கிரிக்கெட் தரவரிசை: அதிக புள்ளிகளை பெற்ற 2-வது வீரராக சூர்யகுமார்
01 Feb 2023துபாய் : தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-02-2023.
02 Feb 2023 -
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ஷ்ரேயாஸ் வெளியே..! சூர்யகுமார் உள்ளே..?
01 Feb 2023நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இஷான் கிஷன், அர்ஷ்தீப்பை பாராட்டிய அனில் கும்ப்ளே
01 Feb 2023பெங்களூரு : இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.
-
எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியது: மெஸ்ஸி
01 Feb 2023அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
-
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி
01 Feb 2023ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஸ்காட்லாந்தில் நெருப்பு திருவிழா கோலாகலம் தீப்பந்தம் ஏந்தி குழந்தைகள், பெண்கள் பேரணி
02 Feb 2023லண்டன்: ஸ்காட்லாந்தில் பாரம்பரியமான நெருப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தீப்பந்தம் ஏந்த பெண்கள், குழந்தைகள் பேரணியாக சென்றனர்.
-
பெஷாவர் தாக்குதல் சம்பவத்தில் போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்த பயங்கரவாதி
02 Feb 2023பெஷாவர்: 100 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதி போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்தது தெரியவந்துள்ளது.
-
பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் கைது
02 Feb 2023கராச்சி: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தீவிர ஆதரவாளரான முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரசீது அகமது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?
02 Feb 2023வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கரன்சி நோட்டுகளில் சார்லஸின் உருவம் நீக்கம்: ஆஸ்திரேலிய அரசு முடிவு
02 Feb 2023கான்பெர்ரா: ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசின் உருவம் நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
-
பட்டா மாறுதல் போன்றவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
02 Feb 2023வேலூர்: பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் தடுக்க வேண்டும் என வேலூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
புதுவை சட்டசபை இன்று கூடுகிறது சபாநாயகர் தொடங்கி வைக்கிறார்
02 Feb 2023புதுச்சேரி: புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி.
-
ஜோபைடனின் கடற்கரை இல்லத்தில் மீண்டும் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
02 Feb 2023வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடனின் கடற்கரை இல்லத்தில் நேற்று எப்.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
-
நலத்திட்ட உதவி வழங்கும் விழா: வரும் 5-ம் தேதி அமைச்சர் உதயநிதி மதுரை வருகை
02 Feb 2023மதுரை: மதுரையில் வரும் 6-ம் தேதி தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
-
காலை சிற்றுண்டி: மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்
02 Feb 2023வேலூர்: வேலூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
குழந்தைக்கு பெயர் சூட்டு விழா: ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் தீபா
02 Feb 2023சென்னை: மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அழைப்பிதழ் கொடுத்தார்.
-
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
02 Feb 2023மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
வேலூர் சத்துவாச்சாரியில் சுகாதார மைய கட்டுமான பணிகள் மற்றும் காலை உணவு திட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்
02 Feb 2023வேலூர்: சத்துவாச்சாரியில் சுகாதார நல மைய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் கா
-
வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் 67 லட்சம் பேர்: தமிழக அரசு தகவல்
02 Feb 2023சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பகப் பதிவுதாரா்களின் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கோரி முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி
02 Feb 2023சென்னை: கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமியிடம் அவரது ஆசையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம்
02 Feb 2023சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் செந்தில் முருகனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் அலுவலரே முடிவெடுப்பார் சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
02 Feb 2023புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆசிரியர் தகுதி முதல்கட்ட தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பம்
02 Feb 2023சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு தொடங்க உள்ளது.
-
இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் 5 திரைகளுடன் கூடிய தியேட்டர்
02 Feb 2023சென்னை: இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் பயணிகளின் பொழுது போக்கிறாக, 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.