முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ரம்யா எம்.பி.யாக பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

புது டெல்லி, ஆக. 28 - நடிகை ரம்யா, சுரேஷ் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடகத்தில்  அண்மையில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதியிலிருந்து திரைப்பட நடிகை ரம்யாவும், பெங்களூர் புற நகர்ப் பகுதி மக்களவை தொகுதியிலிருந்து சுரேஷும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மக்களவை கடந்த கூடியதும், ரம்யா, சுரேஷ் இருவரும் கன்னடத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மண்டியா தொகுதியில் ரம்யா 67611 வாக்குகள் வித்தியாசத்தில் சி.எஸ். புட்டராஜுவையும், பெங்களூர் புறநகர்த் தொகுதியில் சுரேஷ் 1.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியையும் தோற்கடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்