முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - சென்னை அணி அபார வெற்றி

புதன்கிழமை, 11 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், மே, 11 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்று இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை அணி தரப்பில், துவக்க வீரர் விஜய் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஹஸ்சே, ரெய் னா மற்றும் தோனி ஆகியோ ர் அவருக்குப் பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பொலிஞ்சர் நன்கு பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அஸ்வின் மற்றும் ரெய்னா ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசி னர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரா  ன ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரங்கத்தில் 52 -வது லீக் ஆட்ட ம் நடந்தது. இதில் கேப்டன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப் பர் கிங்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சென்னை கிங்ஸ் அணி தரப்பில், மைக் ஹஸ்சே மற்றும் முரளி விஜய் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ராஜஸ்தானின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமும், 3 வீரர்கள் கால் சதமும் அடித் த னர். 

துவக்க வீரர் முரளி விஜய் அதிரடியாக ஆடி அரை சதம் எடுத்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 40 பந்தில் 53 ரன்னை எடுத்தார். இதி ல் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் போத்தா வீசிய பந்தில் ரன் அவுட்டானார். 

அடுத்தபடியாக, துவக்க வீரர் ஹஸ்சே 30 பந்தில் 46 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். தவிர, ரெய்னா 27 பந்தில் 43 ரன்னையும்  கேப்டன் தோனி 19 பந்தில் 41 ரன்னையும் எடுத்தனர். 

முரளி விஜய் மற்றும் ஹஸ்சே இருவரும் இணைந்து முதல் விக்கெட்டி ற்கு 77 ரன்னைச் சேர்த்து சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த னர். இதனை நன்கு பயன்படுத்திய ரெய்னா மற்றும் தோனி இருவரும் மின்னல் வேகத்தில் ஆடியதால் அணி சவாலான ஸ்கோரை எட்டியது.

ராஜஸ்தான் அணி சார்பில், போத்தா 23 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஏ. சிங் 40 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத்தார். வாட்சன் மற்றும் வார்னே ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில் லை. 

ராஜஸ்தான் அணி 197 ரன்னை எடுத்தால் வெற்றி  பெறலாம் என்ற கடின இலக்கை செந்னை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 133 ரன்னை எடுத்தது. 

இதனால் சென்னை அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த லீக்கி ல் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

ராஜஸ்தான் அணி தரப்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரகானே ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. 

ரகானே 36 பந்தில் 52 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். டிராவிட் 16 பந்தில் 20 ரன்னையும், ரவுட் 14 பந்தில் 19 ரன்னையும், டெய்லர் 8 பந்தில் 16 ரன்னையும், துவக்க வீரர் வாட்சன் 10 பந்தில் 11 ரன்னையும் எடுத்தனர்.  

சென்னை அணி சார்பில், பொலிஞ்சர் 22 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ரெய்னா 3 பந்தை வீசி 2 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 24 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். தவிர, மார்கெல் மற்றும் ஜே. பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்