முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலிவு விலை காய்கறி கடைகளில் அமைச்சர் ஆய்வு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.20 - சென்னையில் பண்மை பசுமை காய்கறி கடைகள் 29 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளும் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி இத்திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் காற்கறி கொள்முதல் செய்து பசுமையாக வழங்குவதால் இத்திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

தற்போது வெங்காயம் வெளிமார்க்கெட்டில் ரூ.70, ரூ.80-க்கு விற்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவு மலிவு விலை காய்கறி கடைகளில் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தேனாம்பேட்டை காமதேனு சிறப்பங்காடியில் நேற்று  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு காய்கறிகள் வாங்கிய பெண்களிடம் அவர் காய்கறிகளின் தரம், விலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளது. இதனால் அன்றாடம் காய்கறி வாங்கும் செலவு கணிசமாக குறையும். வெளிமார்க்கெட்டை விட குறைந்த விலையில், பசுமையான காய்கறிகள் விற்கப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் ரூ.4.5 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காய்கறிகள் அதிகளவில் பயிரிட வேண்டும் என்பதற்காக 4941 விவசாயிகளுக்கு ரூ.36 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி இஞ்சி விளைச்சல் செய்ய 933 விவசாயிகளுக்கு ரூ.4.8 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல் போதுமான அளவிற்கு வழங்கப்படுகிறது. வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது தனி அதிகாரி பாலமுருகன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்