முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூற்றாண்டு சினிமா விழாவில் முதல்வருக்கு ஜனாதிபதி பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.25 - இந்தியா நூற்றாண்டு சினிமாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய அளவில் பங்கு உண்டு என்று ஜனாதிபதி பிராணப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழா நிறைவு நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு குத்து விளக்கேற்றினார். 

விழாவில் அவர் பேசியதாவது:-

வரலாறுகள் திறமையான சில மனிதர்கள் மூலமாக உருவாகிறது மறைந்த சினிமா மேதை தாதா பால்கே தனது மனைவியில் நகைகளை விற்று 1913-ம் ஆண்டு ராஜா அரிசந்திரா என்ற பேசாத படத்தை உருவாக்கினார். நூறாண்டு சினிமா திரையுலகில் முதல்வர் ஜெயலலிதாவின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. திரைப்படத்துறையில் அவர் சாதனைப்படைத்துள்ளார். இந்த விழாவிற்கு என அழைத்தததிற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருது, வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் வாழ்த்துகிறேன்.

தென்னிந்திய திரைப்பட உலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., ராஜ்குமார், எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத் உள்பட பலர் சாதனை புரிந்துள்ளனர். 

இந்தியாவில் பூனா திரைப்பட கழகம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள சத்திய ஜித்ரே திரைப்பட கழகமும் இந்த நாட்டிற்கு பல திரைப்பட மற்றும் தொலைகாட்சி நடிகர்களை கொடுத்துள்ளது. இந்த இரண்டு திரைப்பட கழகங்கலும் தேசிய முக்கியதுவம் வாய்ந்ததாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விழாவில் கேரள முதல்வர் உமன்சன்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தார். நூற்றாண்டு திரைப்பட விழாவில் பிரமாதமாக ஏற்பாடு செய்தததிற்கு பாராட்டு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். கர்நாடக செய்தித்துறை அமைச்சர் சந்தோஷ்லா தனது பாராட்டுக்களையும் கர்நாடக சினிமாவின் பெருமைகளையும் எடுத்துரைத்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony