முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னுடைய வளர்ச்சிக்கு மலையாள சினிமாவும் காரணம்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப். 25 - இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. மலையாள திரையுலகம் சார்பில் நடந்த இந்த விழாவில் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி, கேரள அமைச்சர் கே.சி. ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, மது, கமலஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் மதுவின் 80 வது பிறந்த நாளையொட்டி அவருக்கு நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, கமலஹாசன் ஆகியோர் ஆள் உயர மாலை அணிவித்து வாழ்த்திப்பேசினர். விழாவில் கமலஹாசன் பேசியதாவது, 

நடிகர் மதுவின் படங்களில் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதது. மலையாள திரைப்பட கலைஞர்கள் என்னுடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். என்னுடைய இந்த உயரத்திற்கு மலையாள சினிமா பெரிதும் காரணமாக இருந்திருக்கிறது. நமக்கு பக்கத்தில் இப்படியொரு நல்ல சினிமா கலைஞர்கள் இருப்பதில் எனக்கு எப்போதும் பெருமை இருக்கிறது. மலையாள கலைஞர்களுடன் தொடர்ந்து நட்புடன் இருக்கவே ஆசைப்படுகிறேன் என்றார்.  

இயக்குனர் பாலச்சந்தர் பேசுகையில், மம்முட்டியுடன் இணைந்து அழகன் படத்தில் பணியாற்றி இருக்கிறோம். ஆனால் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றாத குறை எனக்கு எப்போதும் உண்டு. அந்த குறையை நான் களைய எண்ணுகிறேன். மலையாள சினிமாக்களில் இலக்கிய தேடல்கள் அதிகம் இருப்பதில் எனக்கு பெருமிதம் உண்டு என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்