முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் பெரியசாமி மகனுடன் கோர்ட்டில் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

முன்னாள் அமைச்சர் பெரியசாமி மகனுடன் கோர்ட்டில் ஆஜர்

மதுரை, செப்.25 - சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி தனது மகனுடன் கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.  இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

முன்னாள் அமைச்சரான ஐ.பெரியசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  புகார் கூறப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செதில்குமார், பிரபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரையில் உள்ள லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு விசாரணைக்காக பெரியசாமி, அவரது மகன் பிரபு ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.                      

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony