முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கில் ஆஜராகாததால் விஜயகாந்துக்கு பிடிவாரண்டு

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, செப்.26 - அவதூறு வழக்கில் விஜயகாந்த் ஆஜராகாததால் நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இது குறித்த விபரம் வருமாறு:- விழுப்புரத்தில் கடந்த 30.8.2012-ல் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பொன்சிவா வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக விஜயகாந்த் தொடர்ந்து 4 முறையும் ஆஜராகவில்லை. இதையொட்டி 25-ந் தேதி(நேற்று) அவர் கண்டிப்ஆக ஆஜர் ஆக வேண்டும். அப்படி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கூறி இருந்தார். 

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது 5-வது முறையாக விஜயகாந்த் ஆஜராகவில்லை. அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் பன்னீர்செல்வம், விழுப்புரம் வக்கீல்கள் நாராயணன், ராமரமேஷ் உள்பட பலர் ஆஜர் ஆனார்கள். விஜயகாந்த ஆஜராகாததற்கு உரிய காரணத்தை குறிப்பிட்டு நீதிபதி கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு மனுவை அவர்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அரசு வக்கீல் பொன்சிவா கூறினார். இதையடுத்து நீதிபதி கிருஷ்ணமூர்த்தி அந்த மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை. 

விஜயகாந்திற்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ந் தேதிக்கும் தள்ளி வைத்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony