முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் ரூ.417 கோடிக்கு கணக்கு இல்லை: மேயர்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.29 - சென்னை மாநகராட்சி தி.மு.க. பதவி காலத்தில் ரூ.417 கோடிக்கு கணக்கு இல்லை  என்று   சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி  குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சைதை துரைசாமி தரைமையில்  நேற்று நடந்தது. கமிஷனர் விக்ரம்கபூர், துணை மேயர் பெஞ்சமின் முன்னிலை வகித்தனர்.

கேள்வி- பதில் நேரம் முடிந்த பிறகு மேயர் சைதை துரைசாமி ஒரு அறிக்கையை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சாலைகள் அமைப்பது குறித்து முன்னாள் மேயர்களான ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் இருந்த காலத்தில் ரூ.417 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுப்பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

சைதாப்பேட்டையில் கெங்கை அம்மன் கோவில் தெருவில் சாலை போடாமலே போட்டதாக தவறான கணக்கு எழுதி இருக்கிறார்கள். இது ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே தி.மு.க. உறுப்பினர்கள் போஸ், தேவஜவகர் ஜோசப் சாமுவேல், நீலகண்டன் உள்பட உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

நீலகண்டன் (தி.மு.க.):- குற்றச்சாட்டு கூறுகிறீர்களே ஓய்வுபெற்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்த தயாரா?

மேயர்:- ஓய்வு பெற்ற நீதிபதி என்ன... பணியில் இருக்கும் நீதிபதியை வைத்தே விசாரணை நடத்தலாம். துணிச்சல் இருந்தால் நீங்கள் அங்கே செல்லுங்கள் என்றார்.

இதை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதற்காக வெளியே செல்கிறீர்கள், உங்களுக்கு ஆண்மை இருந்தால், தின்மை இருந்தால் பதில் சொல்லுங்கள் என்று மேயர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்