முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்கள் வளர்ச்சியில் தமிழகத்துக்கு 2வது இடம்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

ஆரணி, செப்.30-கடன் வழங்குவது வங்கிகளின் கடமை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சென்னை வட்ட கனரா வங்கி சார்பில் அந்தமான் நிகோபார், புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 18,600 பேருக்கு ரூ.202 கோடி மதிப்பில் கடன் வழங்கும் விழா ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய பகுதிகளில்  உள்ள கிளைகள் பங்கேற்று 6613 மாணவர்களுக்கு ரூ.131 கோடி கடன் வழங்கப்படுகிறது. கிராமிய கடனையும் சேர்த்து 18,600 பேருக்கு ரூ.202 கோடி கடன் வழங்கப்படுகிறது. 

தற்போது கல்விக் கடனுக்கு எந்த ஜாமீனும் இல்லாமல் கடன் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சட்டம் நிறைவேற்றியதால் அனைத்து மாணவர்களும் எளிதாகக் கடன் பெறுகின்றனர். ரகுராம் ராஜன் அறிக்கைப் படி வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கோவா முதலிடமும், கேரளம் 2_வது இடமும், தமிழ்நாடு 3_வது இடமும் பெற்றுள்ளன.இதற்குக் காரணம் காமராஜர்தான். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது,  அனைத்து இடங்களிலும் பள்ளிகளைத் திறந்தார். இதனால் வளர்ச்சிக்கு அடித்தளம் வலுவானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony