முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலாலாவுக்கு ஐரோப்பிய யூனியன் விருது

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக். 12 - பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உயரிய விருதான சக்காரோவ் மனித உரிமை விருது வழங்கப்பட்டது. இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் மார்ட்டின் சுல்ஸ் கூறுகையில், மலாலா போன்றவர்களின் கையில் தான் இளைஞர்களின் எதிர்காலம் உள்ளது என்பதை உலகிற்கு தெரிவிப்பதற்காகவே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விருதை வழங்குவதில் ஐரோப்பிய யூனியன் பெருமை அடைகிறது என்றார். ஒவ்வொரு ஆண்டும் ஆன்ட்ரேய் சக்காரோவ் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதின் மதிப்பு 50 ஆயிரம் யூரோ ஆகும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். இந்த உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது என்பதை வலியுறுத்தி போராடிய மலாலா கடந்த ஆண்டு தலிபான்களால் சுடப்பட்டு மீண்டு வந்தார். இதற்கு முன்னதாக சக்காரோவ் விருதினை தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னன் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி ஆகியோர் பெற்றுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis