முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன-5-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழா

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, டிச.17 - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா வரும் ஜனவரி 5- ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பம், அனுப்பானடி செல்லும் வழியில் அமைந்துள்ளது. திரமலை நாயக்கர் கால்த்தில் அமைக்கப்பட்ட இந்தத் தெப்பத்தில் இருந்து மீட்கப்பட்ட முக்குறுணி விநாயகர், மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி  சந்நிதியின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. தெப்பத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அம்மனும், சுவாமியும் எழுந்தருள்வர். கடந்த ஆண்டு தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால், நிலைத் தெப்பம் அமைக்கப்பட்டு, பூஜை நடத்தப்பட்டது. தற்போதும் தெப்பத்தில் தண்ணீர் இல்லை. இந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி காலை 11.08 முதல் 11.32 மணிக்குள் கம்பத்தடி மண்டபத்தில் கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்குகிறது. ஜனவரி 14- ம் தேதி காலை முத்தீஸ்வர் திருக்கோயில் அம்மன் , சுவாமி எழுந்தருள்கின்றனர். பின்னர், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15-ம் தேதி, அம்மன் , சுவாமி சிந்தாமணிக்கு எழுந்தருளி, கதிர் அறுப்புத் திருவிழா நடைபெறுகிறது. ஜனவரி 16-ல், சுவாமி, அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிட காலை 10.05 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் தெப்பத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை அம்மன், சுவாமி தெப்பத்துக்கு புறப்பாடாகிச் செல்வது முதல், மீண்டும் திருக்கோயிலுக்கு வந்து எழுந்தருளும் வரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நடை சார்த்தப்பட்டிருக்கும். விழா ஏற்பாடுகளை, கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் ஆலோசனையின் பேரில், கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெராமன் செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்