முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ்.எல்.சி. - +2 தேர்வு மையங்கள்: தேர்வுத்துறை உத்தரவு

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்_2 தேர்வுகள் எழுதும் மையங்கள் காற்றோட்டமாகவும், வெளிச்சம் உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்_2 தேர்வு மார்ச் மாதம் 3_ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 25_ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 26_ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9_ந் தேதி முடிவடைகிறது.இந்த தேர்வுகளை 19யு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ_மாணவிகள் எழுதுகிறார்கள்.

பள்ளிக்கூட மாணவர்களும், தனித்தேர்வர்களும் எழுதுவதால் தனித்தேர்வர்கள் அவர்களாகவே விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. அது பெரும்பாலும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருக்கலாம்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்_ மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய கோடில் மாணவர்கள் விவரம் ஏற்கனவே பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்டன. இப்போது அந்த விவரம் அனைத்தும் அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும்.

இந்த நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதும் சில மையங்கள் இருட்டாக இருப்பதாக தெரிகிறது. இதையொட்டி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுகள் துறை ஒரு உத்தரவிட்டுள்ளது. அதில் முடிந்தவரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்_2 தேர்வு மையங்கள் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் அவர்களுக்கு தேர்வு எழுத மின்விளக்குகளை எரியவைக்கலாம். தேர்வு மையங்களில் சில நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் மாணவர்கள் தேர்வு எழுத எந்த வித தடையும் இருக்கக்கூடாது என்று கருதி ஜெனரேட்டர்கள் பொருத்த அரசே பணம் கொடுக்கிறது. ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து தேர்வு மையங்களும் மாணவர்கள் தேர்வு நல்லமுறையில் எழுதுவதற்கு வசதியாக காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருக்க முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஏற்பாடு செய்துவருகிறார்கள். இதற்காக பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று தேர்வு மையங்களை பார்வையிட்டு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்