முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் போட்டியிட கோரி நிர்வாகிகள் 2-வது நாளிலும் மனு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.21 - 40 நாடாளுமன்றத்  தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனுக்களை வாங்கிச் சென்றனர். நேற்று முன்தினம் முதல்  முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரமுகர்கள்   விருப்ப மனு தாக்கல் செய்தனர். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றது. .

தமிழகம் முழுவதிலும் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதிக்காக அதிமுக நிர்வாகிகளும், முன்னணியினரும் நேற்று போட்டி போட்டு மனுக்களை வாங்கிச் சென்றனர். 

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்காக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேற்று  விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

பாராளுமன்ற தேர்தல் மே மாதத்துக்குள் 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு_புதுவையில் 40 தொகுதிக்கும் போட்டியிட விரும்புபவர்கள் தலைமை கழகத்தில் நேற்று முதல் விருப்ப மனுதாக்கல் செய்யலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்_ அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதற்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி தலைமை கழகத்தில் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனுத்தாக்கல் செய்வது நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இம்மாதம் 27_ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம்.

நேற்று முன்தினம்  காலை 10 மணிக்கு சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது. ஆனால் காலை 8 மணிக்கே தமிழ்நாடு முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்து தலைமைக் கழகத்தில் திரண்டு இருந்தனர்.

விண்ணப்பம் வழங்குவதற்காக 4 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

மனுக்கள் வாங்க கவுண்டர்கள் முன் நீண்டகியூவில் நின்றார்கள். அமைச்சர்களும், தலைமைக்கழக நிர்வாகிகளும் கியூவில் நின்று பணம் செலுத்தி மனுக்களை வாங்கினார்கள். மனுக்கள் வாங்கும் முன்னர் அவர்களுக்கு தனியாக ஒரு சிலீப் அளிக்கப்பட்டது. அதில் விண்ணப்பதாரர் பெயர் தற்போது கழகத்தில் வைக்கும் பொறுப்பு ஒன்றியம், நகரம், மாவட்டம், விண்ணப்பிக்கும் நாடாளுமன்ற தொகுதி, செல்போன் நம்பர் ஆகிய விபரங்கள் கேட்கப்பட்டிருந்தது. அந்த சிலிப்பை பூர்த்தி செய்து பணம் செலுத்தியதுடன் பணம் கட்டியதற்கான ரசீது கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க.வினர் விருப்ப மனு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதை அவைத் தலைவர் மதுசூதனனிடம் வழங்கினார்கள். முதலில் அமைச்சர்கள் விருப்பமனு கொடுத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் விருப்பமனு கொடுத்தனர். அனைவருமே முதல்_அமைச்சர் ஜெயலலிதா தங்கள் பகுதியில் உள்ள தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தனர். சிலர் 4, 5 தொகுதிகளுக்கும் சேர்த்து மனு கொடுத்தனர்.

நேற்று முதல்வர் ஜெயலிலதா போட்டியிட வேண்டுமென்று எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், திருச்சி, வேலூர், கன்னியாகுமரி, மத்திய சென்னை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். தமிழ்மகன் உசேன் கன்னியாகுமரி, வேலூர், மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார்.

வடசென்னையில் போட்டியிட கச்சாலீஸ்வரர் கோயில் தக்கர் சம்பத் விருப்ப மனு வழங்கினார். விருதுநகர் தொகுதியில் போட்டியிட பிரேமா வாசுதேவன் விருப்ப மனு வழங்கினார். முதல்வர் ஜெயலலிதா ஈரோட்டில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், ஆர்.என்.கிட்டுச்சாமி எம்.எல்.ஏ., ஈரோடு மேயர் மல்லிகா ஆகியோரும், சிவகங்கையில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வி.குணசேகரன் எம்.எல்.ஏ.வும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட கே.என்.ராமச்சந்திரனும், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட என்.ஆர்.சிவபதியும், மத்தியில் சென்னையில் போட்டியிட அமைச்சர் அப்துல்ரஹீம், வடசென்னையில் போட்டியிட அமைச்சர் மாதவரம் மூரத்தி ஆகியோரும் விருப்பமனு கொடுத்தனர்.

மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மூன்று தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. விருப்ப மனு கொடுத்தார். மேலும், ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், தேர்தலில் போட்டியிட  விருப்ப மனுவை வாங்கிச்சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்