முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை குற்றம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்

புதன்கிழமை, 26 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச் 27 - இலங்கை்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான முன்வரைவில், விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போது இரு தரப்பினரும் ஈடுபட்டதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற  விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் மூன்ராவது தீர்மானம் முன்வரைவான இதில் குறப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்ரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை உள்நாட்டு போரின் போது இரு தரப்பினரும் ஈடுபட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வர, யாரும் தண்டனையிலிருந்து தப்பாத வகையில், தகுந்த நிபுணர்களையும் கொண்டு, உரிய விதிமுறைகளை பின்பற்றியும் பாரபட்சமற்ற விசாரணை  நடத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசு தானாகவே விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்த காலக்கட்ட நிகழ்வுகளைக் குறித்தே இத்தகைய விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என அந்த தீர்மானத்தில் முன்வரைவில் வலியுருத்தப்பட்டுள்ளதாக அந்த பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்