முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் இன்று எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.3 - புதுவை சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. இன்று புதிய எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்கிறார்கள். தற்காலிக சபாநாயகராக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தியாகராஜன் நியமிக்கப்பட்டார். இவரது பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் கவர்னர் இக்பால்சிங் தற்காலிக சபாநாயகர் தியாகராஜனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் புதிய எம்.எல்.ஏக்களை பதவிஏற்க செய்யும் அதிகாரத்தையும் தியாகராஜனுக்கு வழங்கினார். இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி. என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி,  எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். பின்னர் புதிய எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் தியாகராஜன் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

இதற்காக புதுவை சட்டசபை இன்று வெள்ளிக்கிழமை கூடுகிறது. 

சட்டசபை கூடுவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் சிவபிரகாசம் வெளியிட்டார். இதில் 3ந் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.05 மணியளவில் சட்டசபை கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்புக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என தெரிகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் சாமி கும்பிட்டார். அவருடன் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ சிவக்குமாரும் சென்றிருந்தார்.

அங்கு நிருபர்களிடம் ரங்கசாமி கூறியபோது அமைச்சர் பட்டியல் தயாராகி விட்டது. விரைவில் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்