முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்கோட்டில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - ஜெயலலிதா

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.27 - பாசன நீர் திட்டம், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து பாலக்கோட்டில் இன்று கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஐந்தாண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பாசனத் திட்டங்கள், குடிநீnullர்த் திட்டங்கள் உட்பட அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் கிடப்பில் போடுவதில் தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வந்துள்ளது.

உதாரணமாக, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாசன வசதி மற்றும் குடிநீnullர் வசதி பெறும் வகையில் நான்கு திட்டங்கள் தீட்டப்பட்டு, அதில் கிருஷ்ணகிரி வலதுபுறக் கால்வாயை nullநீட்டித்து 34 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் எனது ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக மற்ற மூன்று திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது.  பின்னர் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மைனாரிட்டி தி.மு.க. அரசு, கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பாப்பாரப்பட்டி ஏரி  திட்டத்திற்கு மட்டும் தான் நிதி ஒதுக்கீடு செய்தது.  மற்ற இரண்டு திட்டங்களான பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி நீnullரை எரணஹள்ளி ஏரி, புலிக்கரை ஏரி போன்ற 14 ஏரிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டம் மற்றும்  செங்கன்பஸ்தலாவ் ஏரியிலிருந்து தண்டுகரணஹள்ளி, கொண்டசாமனல் ஏரி போன்ற 10 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டம் ஆகியவற்றை  மைனாரிட்டி தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் நாட்டின் வளத்தை சுரண்டும் பணியில் தான் மைனாரிட்டி தி.மு.க. அரசின் கவனம் இருக்கிறது.  மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரால் இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  இந்த ஊழலின் மூலம் கருணாநிதி குடும்பத்தினர் மிகுந்த பலன் அடைந்துள்ளனர்.  

முதல் கட்டமாக கருணாநிதியின் குடும்ப டி.வி.யான கலைஞர் டிவி​க்கு 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி குடும்ப டிவி​யின் பங்குதாரர்களான கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு, மூன்றாவது துணைவியின் மகள் கனிமொழி உள்பட கருணாநிதி குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தி அவர்களை விசாரித்தால், அவர்கள் சுருட்டிய பல லட்சம் கோடி ரூபாய்கள் குறித்த உண்மைகள் வெளிவரும்.  ஆனால், இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.   

ஆகவே, தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் உபரி nullநீரை கால்வாய் மூலம் 24 ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் இரு திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  தருமபுரி  மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இன்று (27.2.2011 ஞாயிற்றுக் கிழமை)  காலை 10 மணியளவில், பாலக்கோடு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டனப் போராட்டம்  நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி.,  தலைமையிலும், தருமபுரி மாவட்ட செயலாளர்  கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ.,  முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம்,  ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும்,  உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்