முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை: 2.20 லட்சம் பக்தர்கள் பதிவு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

ஜம்மு, ஜூன்.18 - அமர்நாத் யாத்திரை செல்ல இந்த ஆண்டு 2.20 லட்சம் பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இமயமலையில் அமைந்திருக்கும் அமர்நாத் சிவன் கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருவர். இந்த ஆண்டு பாதயாத்திரை வருகிற 29 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதியுடன் முடிவடைகிறது. பாத யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்கள் தங்களது பெயரை ரூ. 15 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 

இதுவரை 2,19,190 பக்தர்கள் பெயரை நேரிலும், ஆன்லைனிலும் பதிவு செய்துள்ளனர் என்று ஜம்மு காஷ்மீர் வங்கியின் துணை தலைவர் அப்துல் ஹமீது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்கள் பெயரை பதிவு செய்யும் பணி சுமூகமாக நடைபெற்று வருகிறது. பல்தால் வழியாக பாதயாத்திரை செல்ல 1,09,018 பேரும், பகல்காம் வழியாக செல்ல 1,10,172 பேரும் பெயரை பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்