முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் விடுதலை - முதல்வருக்கு மீனவர்கள் நன்றி

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஜூன் 18, இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுதலையாகி மண்டபம் வந்து சேர்ந்தனர். தங்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜூன் 1-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க 

சென்ற ஜெயக்குமார் என்பவரின் விசைப்படகு 2-ம் தேதி சூறாவளியில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. அதில் சென்ற மீனவர்கள் ஜெயக்குமார், பிரதாப், மாரி,

சுந்தர் ஆகிய 4 பேரும் கடலில் குதித்து நீந்தி இலங்கையை சேர்ந்த நைனார் தீவில் கரையேறினர். அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழஅப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை சந்திக்க வந்த 

இந்திய வெளியுறவு துறை அதிகாரி சிவசங்கர மேனனிடம் இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

அதை தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் வாடிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று இந்திய கடலோர காவல்படை கப்பல் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அழைத்து வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தங்களை காலதாமதமின்றி விடுவிக்க முயற்சி எடுத்த முதலமைச்சருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony