முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால்: கருத்து வேறுபாட்டை போக்க அனைத்து கட்சி கூட்டம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.19 - லோக்பால் மசோதாவிற்குள் பிரதமர் மற்றும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளை உட்படுத்துவது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை போக்க அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஊழலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கும் வகையில் லோக்பால் மசோதா வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான வரை மசோதா இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. 

இதற்கிடையில் லோக்பால் மசோதாவுக்கு பிரதமரையும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளையும் உட்படுத்த வேண்டும் என்று லோக்பால் மசோதா வரைவு கமிட்டியில் உள்ள சிவில் உறுப்பினர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு கமிட்டியில் உள்ள அரசு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று காங்கிரஸ் உயர்மட்டக்குழுக்கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, வரைவு கமிட்டி தலைவரும் நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது லோக்பால் மசோதாவுக்கு பிரதமரை உட்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் இதுதொடர்பாக கருத்தொற்றுமையை ஏற்படுத்த அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அண்ணா ஹசரே ஆகியோர் வரவேற்றுள்ளனர். ஆனால் இது காலதாமதமான முடிவு என்று வலது கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாகவும் அந்த கட்சி அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்