முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரச்சனையில் தி.மு.க. எதுவும் செய்யவில்லை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

நெல்லை ஜூன்-30 - தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசாக இருந்ததால் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகான மத்திய அரசை வலியுறுத்த இயலவில்லை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நெல்லை வந்த அவர் செய்தியாளர்களுக்களித்த பேட்டியில் மேலும் தெரிவித்தாவது:   நெல்லை மாவட்டம் வடக்கு தாழையுத்து பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி மீது சமுகவிரோத கும்பல் கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளது. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலித் தலைவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். அவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டு. அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மத்திய அரசின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் தேவை. அப்போதுதான் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். ஈழத்தமிழர்கள் பிரச்சனை சர்வதேச சிக்கல்கள் நிறைந்தது.  இந்த விஷயத்தில் இலங்கைக்கு சீனா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக உள்ளது. எனவே மத்திய அரசு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ராஜபக்ஷேவை சர்வதே நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் மைனாரிட்டி அரசாக இருந்ததால் இலங்கை தமிழர் பிரச்சனையில் எதுவும் செய்ய இயலவில்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு கான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசால் முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்