முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் ரயில் மோதி யானை பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஜல்பாய்குரி,ஜூலை.3 - மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் மோதியதில் யானை பலியானது.ஜல்பாய்குரி மாவட்டத்தில் பானர்ஹாட் என்ற இடத்தில் அலிபருதூரில் இருந்து அசான்சால் வரை செல்லும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு யானைகள் மீது மோதியது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த யானைகளை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் பெண் யானை இறந்தது. மற்றொரு யானைக்கு லதாகுரி வனப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள டயானா வனப் பகுதியில் இருந்து யானைகள் இரையை தேடியும், தண்ணீருக்காகவும் இருப்பு பாதையை கடப்பது வாடிக்கையாக உள்ளது. வேகமாக வரும் ரயில்களின் அவை அடிபட்டு உயிரிழப்பதும் உண்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!